Page Loader
பிரதமர் மோடியை சந்தித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் : என்ன பேசினார் தெரியுமா?
பிரதமர் மோடியை சந்தித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன்

பிரதமர் மோடியை சந்தித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் : என்ன பேசினார் தெரியுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 03, 2023
04:13 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் வெள்ளிக்கிழமை (மார்ச் 3) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்திய பிரதமர் மோடியுடன் இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தியா வந்துள்ள கெவின் பீட்டர்சன், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துள்ளார். இந்நிலையில், பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, மோடியின் பிறந்தநாளில் சிறுத்தைகளை விடுவித்தது குறித்து அவரிடம் பேசியது தனக்கு கிடைத்த கவுரவம் என்று கூறினார். மேலும் பிரதமர் மோடியின் புன்னகை மற்றும் உறுதியான கைகுலுக்கலை எப்போதும் மறக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

கெவின் பீட்டர்சன் ட்வீட்