நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன் நியூசிலாந்து ஒயிட்-பால் அணிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதோடு, இன்று ஜூன் 19, 2024-25 சீசனுக்கான குழுவிடமிருந்து மத்திய ஒப்பந்தத்தையும் அவர் நிராகரித்தாக கூறப்படுகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வில்லியம்சன் எடுத்த முடிவை அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்தது. அதோடு, கேன் தனது சர்வதேச கிரிக்கெட் விளையாட்டை நீடிக்க வேண்டும் தான் அழைப்பு விடுத்ததாகவும் கூறியது. 2024 டி20 உலகக் கோப்பையில் நியூஸிலாந்து அணியின் மோசமான ஆட்டத்தினை அடுத்து கேன் வில்லியம்சனின் இந்த முடிவு வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டி தொடரை நியூஸிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வியடைந்த பின்னர் குழு நிலைகளில் போட்டியிலிருந்து வெளியேறினர்.
கேப்டன் பதவியில் இருந்து விலகிய கேன்
அழைப்பைப் பற்றி வில்லியம்சன் என்ன சொன்னார்?
"கிரிக்கெட் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் அணியை முன்னோக்கி நகர்த்த உதவுவதற்கு நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன் மற்றும் நான் தொடர்ந்து பங்களிக்க விரும்புகிறேன்," என்று அவர் கூறினார். "இருப்பினும், நியூசிலாந்தின் கோடை காலத்தில் வெளிநாட்டு வாய்ப்பைப் பின்தொடர்வது என்னால் முடியாது என்பதால், மத்திய ஒப்பந்த வாய்ப்பை என்னால் ஏற்க முடியாது" வில்லியம்சன் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவது இந்த நேரத்தில் தனக்கு மிகவும் முக்கியமானது என்று கூறினார். "நியூசிலாந்திற்காக விளையாடுவது நான் பொக்கிஷமாக கருதுகிறேன், அணிக்கு திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எனது விருப்பம் இன்னும் குறையாமல் உள்ளது." என அவர் மீண்டும் தெரிவித்தார். "எனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று" என்றார் கேன்.