
ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் 3 வெள்ளி வென்றது இந்தியா
செய்தி முன்னோட்டம்
ஆர்மீனியாவின் யெரெவனில் நடைபெற்ற ஐபிஏ ஜூனியர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஹர்திக் பன்வார் (80 கிலோ), அமிஷா கெரட்டா (54 கிலோ) மற்றும் பிராச்சி டோகாஸ் (80 கிலோ)தங்களுடைய இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
இதற்கிடையே பயல் (48 கிலோ), நிஷா (52 கிலோ), வினி (57 கிலோ), ஸ்ருஷ்டி (63 கிலோ), அகன்ஷா (70 கிலோ), மேகா (80 கிலோ), ஜதின் (54 கிலோ), சாஹல் (75 கிலோ), ஹேமந்த் (80 கிலோ) ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா ஏற்கனவே 5 வெண்கலம் வென்றுள்ள நிலையில், மொத்தம் 17 பதக்கங்களை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 3 வெள்ளி
Indian boxers Hardik Panwar, Amisha Keretta and Prachi Tokas signed off with silver medals after suffering defeats in their respective finals at the IBA Junior World Boxing Championships in Yerevan, Armenia.#IndianBoxers #IBA #JuniorWorldBoxingChampionship pic.twitter.com/ZzMxEBLILU
— SportsIndiaShow (@SportsIndiaShow) December 4, 2023