Page Loader
டி20 கிரிக்கெட்டில் 2,000+ ரன்கள்! பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஜிதேஷ் சர்மா புதிய சாதனை!

டி20 கிரிக்கெட்டில் 2,000+ ரன்கள்! பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஜிதேஷ் சர்மா புதிய சாதனை!

எழுதியவர் Sekar Chinnappan
May 04, 2023
11:58 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஜிதேஷ் சர்மா டி20 கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளார். டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், லியாம் லிவிங்ஸ்டோன் (82*) மற்றும் ஜிதேஷ் ஷர்மா (49*) பார்ட்னர்ஷிப்பில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களை எடுத்தது. 49 ரன்களை எடுத்த ஜிதேஷ் சர்மா டி20 கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கிடையே ஐபிஎல்லில் ஜிதேஷ் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோரும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

jitesh sharma t20 numbers

டி20 கிரிக்கெட்டில் ஜிதேஷ் சர்மா புள்ளிவிபரம்

ஜிதேஷ் சர்மா இப்போது 86 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 29.79 என்ற சராசரியுடன் 149.85 ஸ்ட்ரைக் ரேட்டில் 2,026 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒன்பது அரைசதங்களும் அடங்கும். ஜிதேஷ் தற்போது டி20 கிரிக்கெட்டில் 201 பவுண்டரிகள் மற்றும் 90 சிக்சர்களை விளாசியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் முன்னதாக ஜிதேஷ் சர்மாவை ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலைக்கு வாங்கியது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசனில் அறிமுகமாகி 163.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 234 ரன்கள் எடுத்துள்ளார்.