21 ஆண்டுகளாக தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் எடுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை!
இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க டெஸ்டில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, 21 வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து-நியூசிலாந்து இடையேயான முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி தொடங்கிய சில நேரத்திலேயே ஆண்டர்சன் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆண்டர்சன் கடந்த இரண்டு தசாப்தங்களாக டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தின் வேகபந்துவீச்சின் தூணாக இருந்து வருகிறார். இவர் தற்போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ் ஆண்டர்சன் புள்ளி விபரங்கள்
ஆண்டர்சன் டிசம்பர் 2002இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச போட்டிகளில் விளையாடி விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 178 ஆட்டங்களில் 677 விக்கெட்டுகளுடன், மூன்றாவது அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சிறபபி பெற்றுள்ளார். மேலும், சச்சின் டெண்டுல்கருக்கு (200) அடுத்து, டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ஆட்டமிழந்த வீரர்களில் ஆண்டர்சன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆண்டர்சன் 2015ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், 194 ஆட்டங்களில் 269 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்து அணியின் அதிக விக்கெட் எடுத்தவராக உள்ளார். கடந்த ஆண்டு, ஆண்டர்சன் ஒரு நாட்டில் 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.