இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வர்ணனையாளராக அறிமுகமாகும் இஷாந்த் ஷர்மா
செய்தி முன்னோட்டம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை 12 ஆம் தேதி டொமினிகாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளனர்.
ஒருமாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் களமிறங்குவதால், வீரர்கள் புத்துணர்ச்சியுடன் உள்ளனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமார் போன்ற இளம் வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தங்கள் முதல் அழைப்பைப் பெற்றனர்.
இருப்பினும், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து படிப்படியாக நீக்கப்பட்ட மூத்த வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவும் மீண்டும் களமிறங்குகிறார். ஆனால், வீரராக அல்லாமல் வர்ணனையாளராக களமிறங்க உள்ளார்.
jio cinema commentators squad
ஜியோ சினிமா வர்ணனையாளர் குழுவில் இஷாந்த் ஷர்மா
திங்களன்று (ஜூலை 10) ஜியோ சினிமா இஷாந்த் ஷர்மாவை இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட முழு சுற்றுப்பயணத்திற்கான வர்ணனை குழுவின் ஒரு பகுதியாக அறிவித்தது.
கடைசியாக 2021 நவம்பரில் நியூசிலாந்திற்கு எதிராக கான்பூரில் இந்தியாவுக்காக விளையாடிய இஷாந்த் ஷர்மா, உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது ஒரே 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ள இஷாந்த், டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.