இஷான் கிஷன் அதிரடி: சையத் முஷ்டாக் அலி கோப்பை வரலாற்றில் ஜார்கண்ட் அணி புதிய சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப்போட்டியில், ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் அபாரமான சதமடித்துப் புதிய சாதனைப் படைத்துள்ளார். ஹரியானா அணிக்கு எதிரான இந்த முக்கியமானப் போட்டியில், தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கிய அவர், வெறும் 56 பந்துகளில் 100 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் சதமடித்த முதல் கேப்டன் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றுள்ளார். அவரது இந்த அதிரடி ஆட்டம் ஜார்கண்ட் அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவியது. மேலும், அந்த அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை முதல்முறையாக வென்றது.
இலக்கு
ஹரியானாவுக்கு சவாலான இலக்கு
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணிக்கு, இஷான் கிஷன் மற்றும் விராட் சிங் இணை சிறப்பானத் தொடக்கத்தை அளித்தது. இஷான் கிஷன் தனது இன்னிங்ஸில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மறுபுறம் ஹரியானா அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோரின் பந்துவீச்சை இஷான் கிஷன் நேர்த்தியாக எதிர்கொண்டார். இறுதியில் ஜார்கண்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 198 ரன்களைக் குவித்தது.
அங்கீகாரம்
ஐபிஎல் ஏலத்திற்குப் பிறகு கிடைத்த அங்கீகாரம்
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷன் அதிக விலைக்கு (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ₹11.25 கோடிக்கு வாங்கியது) விற்பனையான நிலையில், அவரது இந்த சதம் அந்தத் தேர்வைச் சரி என நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியத் தேசிய அணியில் மீண்டும் இடம்பிடிக்கப் போராடி வரும் கிஷனுக்கு, இந்தச் சதம் ஒரு மிகப்பெரியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. கேப்டனாகப் பொறுப்பேற்று அணியை முன்னின்று நடத்தி இறுதிப்போட்டியில் இத்தகையச் சாதனையைச் செய்தது கிரிக்கெட் விமர்சகர்களிடையேப் பாராட்டைப் பெற்றுள்ளது.