LOADING...
மெஸ்ஸி நிகழ்ச்சி குளறுபடிக்கு அவதூறு: ₹50 கோடி நஷ்டஈடு கோரி சவுரவ் கங்குலி வழக்கு!
ரூ.50 கோடி நஷ்டஈடு கோரி சவுரவ் கங்குலி வழக்கு

மெஸ்ஸி நிகழ்ச்சி குளறுபடிக்கு அவதூறு: ₹50 கோடி நஷ்டஈடு கோரி சவுரவ் கங்குலி வழக்கு!

எழுதியவர் Sekar Chinnappan
Dec 18, 2025
08:35 pm

செய்தி முன்னோட்டம்

கொல்கத்தாவிற்கு லியோனல் மெஸ்ஸி வருகை தந்த போது நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கொல்கத்தா அர்ஜென்டினா ரசிகர் மன்றத்தின் தலைவர் உத்தம் சாஹா, சவுரவ் கங்குலி மீது ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதற்காக, அவருக்கு எதிராக ₹50 கோடி நஷ்டஈடு கோரி கங்குலி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். தன் மீதானப் புகார்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இவைச் சொல்லப்பட்டதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டு 

உத்தம் சாஹாவின் குற்றச்சாட்டு

கொல்கத்தா அர்ஜென்டினா ரசிகர் மன்றத் தலைவர் உத்தம் சாஹா, ஒரு சமூக வலைதள நேர்காணலில் கங்குலி மீது கடுமையானப் புகார்களை முன்வைத்தார். அதில், இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சதாத்ரு தத்தா, கங்குலியின் கையாள் போலச் செயல்படுவதாகவும், கங்குலி ஒரு தரகரைப் போல செயல்பட்டுப் பணத்திற்காக எங்கு வேண்டுமானாலும் ஓடுவார் என்றும், அவர் வங்காளக் கிரிக்கெட்டையே அழித்துவிட்டார் என்றும் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து கங்குலி இந்தச் சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்துள்ளார்.

விளக்கம்

கங்குலியின் விளக்கம்

இந்தத் தொடர் புகார்கள் குறித்து விளக்கம் அளித்துள்ள கங்குலி, தான் அந்த நிகழ்ச்சியில் ஒரு விருந்தினராக மட்டுமே பங்கேற்றதாகவும், நிகழ்ச்சியைத் திட்டமிடுவதிலோ அல்லது மேலாண்மை செய்வதிலோ தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், உத்தம் சாஹா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டு, அந்தத் தகவல்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கங்குலியின் வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மெஸ்ஸியைச் சரியாகப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே மன்னிப்புக் கேட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் இப்போது சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.

Advertisement