LOADING...
12 சிக்ஸர்கள்.. 334 ஸ்டிரைக் ரேட்! ஐபிஎல் நாக்-அவுட் போட்டியில் 15 வயது சிறுவனின் அசுர ஆட்டம்- Viral Moment
சூரியவன்ஷியின் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 243/8 ரன்கள் குவித்தது

12 சிக்ஸர்கள்.. 334 ஸ்டிரைக் ரேட்! ஐபிஎல் நாக்-அவுட் போட்டியில் 15 வயது சிறுவனின் அசுர ஆட்டம்- Viral Moment

எழுதியவர் Venkatalakshmi V
May 28, 2026
07:20 am

செய்தி முன்னோட்டம்

மே 27 நடந்த ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த நாக்-அவுட் போட்டியில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது பக்கம் திரும்ப வைத்துள்ளார் ராஜஸ்தான் அணியின் 15 வயது இளம் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த வைபவ், வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள்(12 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) குவித்து அசுர வேட்டையாடினார். இவரது அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 243/8 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய SRH 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால், ராஜஸ்தான் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியது.

வைபவ்

சதம் தவறவிட்ட சோகம்: மைதானத்திலேயே கண் கலங்கிய வைபவ்

போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங் செய்த விதம், கிறிஸ் கெய்லின் 30 பந்து அதிவேக ஐபிஎல் சத சாதனையை முறியடித்துவிடும் என்றே எதிர்பார்க்க வைத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக 8-வது ஓவரில் பிரஃபுல் ஹிங்கே பந்துவீச்சில் டீப் தேர்ட் மேன் திசையில் கேட்ச் கொடுத்து 97 ரன்களில் ஆட்டமிழந்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க சதத்தை வெறும் 3 ரன்களில் தவறவிட்ட ஏமாற்றத்தில், இந்த 15 வயது சிறுவன் மைதானத்தை விட்டு வெளியேறும்போது கண்களில் கண்ணீருடன் மிகுந்த சோகத்துடன் நடந்து சென்றது ரசிகர்களை நெகிழ வைத்தது. இருப்பினும், ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று இந்த இளம் சிங்கத்திற்குப் பாராட்டு தெரிவித்தது. சூரியவன்ஷியின் இந்த ஆட்டத்திற்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement