அணியில் தோனி, ஜடேஜா தக்க வைப்பா? சென்னை சூப்பர் கிங்ஸ் பதிவால் ரசிகர்கள் குழப்பம்
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான உரிமையாளர்களில் ஒன்றான, சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்று, அக்டோபர் 29, தங்களது சாத்தியமான தக்கவைப்புகளை பற்றி ஒரு குறிப்பால் உணர்த்தும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. CSK அணியின் அதிகாரபூர்வ சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு, ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக தங்கள் ரசிகர்கள் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டது. CSK தனது ட்வீட்டில் 5 வீரர்களின் குறிப்பிட்ட எமோஜிகளைப் பயன்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டர், கிவி பழம் மற்றும் ராக்கெட் ஆகியவற்றின் எமோஜிகளைப் பயன்படுத்தி இருந்ததை வைத்து, ரசிகர்கள், இது எம்எஸ் தோனி, ரச்சின் ரவீந்திரா மற்றும் மதீஷா பத்திரனா போன்றவர்களை தான் குறிக்கிறது என யூகித்து கொண்டிருந்தனர்.
Twitter Post
💛😍🔥🤝✅🌟 💪🧑🍳⚡🦁🕸️⚓ 🚀🧨🏏🥊🛶🎯 🏓🎤🎩⏳🚁🔍 🛡️⚔️🧸🥝🎠🤞 The Ones You Seek is Seeking You! Tap the 🔗 - https://t.co/MNwIFDgxBK and play the #DeadlineDay now! #WhistlePodu #Retentions2025— Chennai Super Kings (@ChennaiIPL) October 29, 2024
மீண்டும் அணியில் இணைகிறாரா தோனி?
சிஎஸ்கே அவர்களின் தக்கவைப்பு பட்டியலை வெளிப்படையாக கூறாவிட்டாலும், இந்தியன் பிரீமியர் லீக்கில் இன்னும் ஒரு சீசனுக்காவது எம்எஸ் தோனி திரும்புவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. CSK உடனான தனது எதிர்காலம் குறித்த ஊகங்களுக்கு மத்தியில், ஒரு தனியார் ஊடக பேட்டியில், "சில வருட கிரிக்கெட்டைதன்னால் முடிந்தவரை ரசிக்க விரும்பு"வதாகக் கூறி, ஐபிஎல் 2025 க்கு மீண்டும் வருவதைப் பற்றி MSD குறிப்பிட்டு பேசி இருந்தார். கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாடிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து, வரிசையில் கடைசியில் பேட்டிங் செய்யத் தொடங்கியபோது தோனியின் ஐபிஎல் திட்டங்களைச் சுற்றி கேள்விகள் தொடங்கியது.
பிளேயர் ரெடென்க்ஷன் விதி
வரவிருக்கும் மெகா ஏலத்திற்கு முன்னதாக, அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் ஃப்ரான்சைஸ் பிளேயர் தக்கவைப்பு பட்டியல்கள் இறுதி செய்யப்பட வேண்டிய விதி இருப்பதால், அணியில் தோனியின் எதிர்காலம் முக்கிய கவனம் பெறுகிறது. இந்த ஆண்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட விதி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை அன் கேப்ட் என வகைப்படுத்த அனுமதிக்கிறது. இது சிஎஸ்கே அணிக்கும் அதன் கேப்டனுக்கும் பயனளிக்கும் ஒரு மூலோபாய வழியில் தோனியைத் தக்கவைக்க அனுமதிக்கலாம். CSK இன் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தோனி அடுத்த சீசனில் திரும்புவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.