ஐபிஎல் 2024: இறுதிப் போட்டியில் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
செய்தி முன்னோட்டம்
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 போட்டி தொடரின் பைனான்ஸ் போட்டிக்கான குவாலிஃபையர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
பைனல்ஸிற்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையும் பெற்றுள்ளது KKR.
நேற்று நடைபெற்ற குவாலிஃபயர்ஸ் போட்டியில் 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹைதராபாத் 159 ரன்களை சேர்த்தது.
160 ரன்கள் இலக்குடன் பேட்டிங் இறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 13.4 ஓவர்களில் 164 ரன்கள் குவித்தது.
தோல்வியடைந்த SRH நாளை நடைபெறும் எலிமினேஷன் சுற்றில் மற்றொரு அணியுடன் வெள்ளிக்கிழமை களம் காணும்.
வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும்.
embed
இறுதிப் போட்டியில் KKR
12 years apart - Same goal. Same dream. 🏆 pic.twitter.com/I9oDVY3v2c— KolkataKnightRiders (@KKRiders) May 21, 2024