
ஐபிஎல் 2023 இல் தொடர் தோல்விகள் : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
டெல்லி கேப்பிடல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஐபிஎல் 2023 சீசனுக்கு பிறகு அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டிங் இது குறித்து தனக்கு மிக நெருக்கமான சிலருடன் விவாதித்தார் என்பதும், அவர் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்காத நிலையில், இந்த முடிவிற்காக தன்னை தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
டெல்லி கேப்பிடல்ஸ் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சேவைகளைத் தக்கவைக்க விரும்பினால், அவரை சமாதானப்படுத்துவதற்கான நேரம் இது.
2018 சீசனுக்கு முன்னதாக ரிக்கி பாண்டிங் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இணைந்தார்.
Ponting as coach record for delhi capitals
பாண்டிங் தலைமையின் கீழ் டெல்லி கேப்பிடல்ஸ் செயல்திறன்
பாண்டிங்கின் தலைமையேற்ற பின் டெல்லி 2018 இல் எட்டாவது இடத்தைப் பிடித்தது.
மேலும் 2019 ஐபிஎல் சீசனில் பிளேஆப் சுற்றை எட்டியது. 2020 இல் இறுதிப்போட்டி வரை முன்னேறி ரன்னர் அப் ஆனது. 2021 இல் மீண்டும் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், கடந்த ஆண்டு ஐந்தாவது இடத்தில் பின்தங்கியது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவி மோசமான நிலையில் உள்ளது.
கேப்டன் ரிஷப் பந்த் இல்லாதது உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு கூறப்பட்டாலும், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் செயல்திறனும் தற்போது கேள்விக்குள்ளாகி உள்ளது.
இதனால் தோல்விக்கு பொறுப்பேற்று பாண்டிங் தற்போது விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.