ஐபிஎல் 2023 சீசனில் இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்த 'மிஸ்டர் 360' சூர்யகுமார் யாதவ்
வான்கடேயில் நடந்த ஐபிஎல் 2023 சீசனின் 42வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய நிலையில் இந்தியாவின் மிஸ்டர் 360 என வர்ணிக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார். 213 எனும் கடினமான இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் என தடுமாறியபோது சூர்யகுமாரின் 55 ரன்கள் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. மேலும் மும்பை இந்தியன்ஸின் டிம் டேவிட் (45*) மற்றும் திலக் வர்மா (29*) ஆகியோரின் கடைசி நேர அதிரடி ஆட்டம் ஐபிஎல்லின் 1,000வது போட்டியில் மும்பை இந்தியன்ஸின் வெற்றிக்கு வழிகோலியது.
டி20 கிரிக்கெட்டில் 6,000 ரன்களை கடந்த சூர்யகுமார் யாதவ்
இந்த சீசனின் தொடக்கத்தில், சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் 6,000 ரன்களை பூர்த்தி செய்தார். மேலும் சூர்யகுமார் இப்போது 250 டி20 போட்டிகளில் 149.96 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 6,099 ரன்கள் எடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில் மூன்று சதங்கள் மற்றும் 39 அரைசதங்கள் அடங்கும். இதில் 18 அரைசதங்கள் ஐபிஎல்லில் எடுத்ததாகும். ஐபிஎல்லில் இதுவரை 131 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 2,845 ரன்களை 138.98 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். மேலும் மார்ச் 2021 இல் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், 1,675 ரன்களை 175.76 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடங்கும்.
இந்த காலவரிசையைப் பகிரவும்