
சச்சின் டெண்டுல்கர் மற்றும் கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக் கிழமை (மே 7) நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கே.எல்.ராகுலின் சாதனையை முந்தியுள்ளார்.
சாம்சன் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 ஆட்டத்தின் போது நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை அடித்தார்.
இதன் மூலம், ஐபிஎல்லில் 300 பவுண்டரிகள் அடித்து , இந்த மைல்கல்லை எட்டிய 22 வது வீரர் ஆனார்.
மேலும் இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 295 பவுண்டரிகள் அடித்த சச்சின் டெண்டுல்கரை இந்தப் பட்டியலில் அவர் விஞ்சினார்.
பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் 729 பவுண்டரிகளுடன் இதில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
most sixes by wicket-keeper in ipl
ஐபிஎல்லில் அதிக சிக்சர்கள் அடித்த நான்காவது விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன்
சாம்சன் ஐந்து சிக்சர்களுடன் ஐபிஎல்லில் தனது சிக்சர் எண்ணிக்கையை 114 ஆக உயர்த்தினார்.
இதன் மூலம் ஐபிஎல்லில் அதிக சிக்சர் அடித்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் கே.எல்.ராகுலின் 109 சிக்சர்களை விஞ்சி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
மேலும் இப்போது விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் அதிக ஐபிஎல் சிக்சர்களுடன் எம்எஸ் தோனி, தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் மட்டுமே சாம்சனை விட முன்னணியில் உள்ளனர்.
இதில் எம்எஸ் தோனி 232 சிக்சர்களும், தினேஷ் கார்த்திக் 131 சிக்சர்களும், ரிஷப் பந்த் 123 சிக்சர்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.