ஐபிஎல் 2023 லீக் சுற்று முடிவு! ஆதிக்கத்தை தொடரும் ஜிடி, எல்எஸ்ஜி! திருப்பி அடித்த சிஎஸ்கே, எம்ஐ!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளேஆப் செல்லும் நான்கு அணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இதன்படி கடந்த சீசனில் பட்டம் வென்ற நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி மற்றும் முகமது ஷமி போன்ற மூத்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், ஷுப்மான் கில், ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற அடுத்த தலைமுறை வீரர்களை இந்த ஐபிஎல் அடையாளம் கண்டுள்ளது.
4 teams qualified in ipl2023
ஐபிஎல் 2023 பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நான்கு அணிகள்
2022 ஐபிஎல் சீசனில் அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ், யாருமே எதிர்பாராத வகையில் அந்த சீசனில் லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றதோடு, சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
இந்த முறையும் அதே போல் ஆதிக்கம் செலுத்தி, முதல் ஆளாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த இரு 20 தொடர்களிலும் புள்ளிகளை பெற்ற ஒரே அணி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டான்சோடு கடந்த சீசனில் அறிமுகமான எல்எஸ்ஜியும் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதற்கிடையியே 2022 சீசனில் கடைசி 2 இடங்களை பிடித்து படுதோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இந்த முறை அபாரமாக விளையாடி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.