
PBKS vs RCB : 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி
செய்தி முன்னோட்டம்
மொஹாலியில் நடந்த ஐபிஎல் 2023 இல் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி வென்றது.
பிபிகேஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் அதிரடி ஆட்டத்தால் முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தனர்.
டு பிளெஸ்ஸிஸ் அதிகபட்சமாக 84 ரன்களையும், கோலி 59 ரன்களையும் எடுத்தனர்.
எனினும் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்ததால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹர்ப்ரீத் பிரார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Punjab Kings All out for 150
150 ரன்களில் சுருண்ட பஞ்சாப் கிங்ஸ்
175 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிம்ரன் சிங் 46 ரன்களும், ஜிதேஷ் ஷர்மா 41 ரன்களும் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அபாரமாக பந்துவீசிய ஆர்சிபியின் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆர்சிபியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் தலா 3 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் ஐந்தாவது இடத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முன்னேறியுள்ளது.