Page Loader
PBKS vs LSG : நேருக்கு நேர் மோதல், மொஹாலி மைதான புள்ளி விபரங்கள்
PBKS vs LSG : நேருக்கு நேர் மோதல், மொஹாலி மைதான புள்ளி விபரங்கள்

PBKS vs LSG : நேருக்கு நேர் மோதல், மொஹாலி மைதான புள்ளி விபரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 27, 2023
07:49 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 தொடரின் 38வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) எதிர்கொள்கிறது. போட்டி மொஹாலியின் பிசிஏ மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 28) நடைபெறவுள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் ஏழு போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றிகளை பெற்றுள்ளன. கடந்த சீசனில்தான் எல்எஸ்ஜி ஐபிஎல் அறிமுகம் ஆனதால், இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளது. கடந்த 2022 சீசனில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியபோது கே.எல்.ராகுல் தலைமையிலான எல்எஸ்ஜி வெற்றி பெற்ற நிலையில், இந்த சீசனில் நடந்த முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ஆர்ஆர் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

mohali pca stadium numbers

மொஹாலி மைதானத்தின் புள்ளி விபரங்கள்

மொஹாலி மைதானம் பொதுவாக பேட்டர்களுக்கு சாதகமாக இருப்பதால், அதிக ஸ்கோர் எடுக்கப்பட வாய்ப்புண்டு. இங்கு 59 ஐபிஎல் ஆட்டங்களில் 33 ஆட்டங்களில் சேசிங் அணிகள் வெற்றி பெற்றுள்ளது. 2018 முதல், பிபிகேஎஸ் விளையாடிய 13 ஆட்டங்களில் ஒன்பது வெற்றிகளை பெற்றுள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக, அவர்கள் இங்கு 59 ஆட்டங்களில் 31 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளனர். 2018 மற்றும் 2021 க்கு இடையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ள கே.எல்.ராகுல், மொஹாலியில் 11 ஐபிஎல் போட்டிகளில் 448 ரன்கள் குவித்துள்ளார். இதற்கிடையே, தோள்பட்டை காயம் காரணமாக தனது அணியின் கடைசி மூன்று ஆட்டங்களில் தவறவிட்ட பஞ்சாப் கிங்ஸ் அணியின் வழக்கமான கேப்டன் ஷிகர் தவான் மீண்டும் இந்த போட்டியில் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.