அடுத்த செய்திக் கட்டுரை

பிரபல கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! பின்னணி என்ன?
எழுதியவர்
Sekar Chinnappan
May 18, 2023
05:27 pm
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சனிக்கிழமை (மே 20) அன்று ஈடன் கார்டனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் பாரம்பரிய கால்பந்து கிளப்பான மோஹுன் பாகனின் ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளது. இந்தியன் சூப்பர் லீக் சாம்பியனான ஏடிகே மோஹுன் பாகன் கிளப், ஜூன் 1 முதல் அதிகாரப்பூர்வமாக மோஹுன் பாகன் சூப்பர் ஜெயன்ட் என பெயர் மாற்றப்பட உள்ளது. இது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வைத்துள்ள ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமத்திற்கு சொந்தமானது. இதனால், பெயர் மாற்றத்தை பிரபலப்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடக்கும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மோஹுன் பாகனின் புதிய ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மோஹுன் பாகனின் ஜெர்சி
Lucknow's #GazabAndaz, now in Kolkata's colours. 🔥
— Lucknow Super Giants (@LucknowIPL) May 18, 2023
Our tribute to Mohun Bagan and the City of Joy. 🟢🔴 pic.twitter.com/JTaWpSB1vq