Page Loader
டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் ஐடென் மார்க்ரம் சாதனை
டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எனும் மைல்கல்லை கடந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் ஐடென் மார்க்ரம் சாதனை

டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் ஐடென் மார்க்ரம் சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
May 05, 2023
12:20 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எனும் மைல்கல்லை ஐடென் மார்க்ரம் எட்டியுள்ளார். 118 டி20 கிரிக்கெட் போட்டிகளில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் 2014 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற அணியின் கேப்டனாக இருந்த ஐடென் மார்க்ரம் ஒயிட் பால் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் 2023 க்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

aiden markram t20 numbers

டி20 கிரிக்கெட்டில் ஐடென் மார்க்ரம் புள்ளிவிபரம்

2014 நவம்பரில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஐடென் மார்க்ரம் தற்போது 3,030 ரன்கள் எடுத்துள்ளார். இந்த எண்ணிக்கையில் 22அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும். சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை 2019 இல் இலங்கைக்கு எதிராக அறிமுகமானார். அவர் 34 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 966 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒன்பது அரைசதங்களை அடித்துள்ளார். ஐபிஎல் பொறுத்தவரை மார்க்ரம் இப்போது 35.00 என்ற சராசரியை 700 ரன்களை எட்டியுள்ளார்.இதில் 4 அரைசதங்களும் அடங்கும். மேலும் ஐபிஎல்லில் 50 பவுண்டரிகள் எனும் மைல்கல்லையும் கடந்துள்ளார். இதற்கிடையில், ஐடென் மார்க்ரம் நடப்பு ஐபிஎல் சீசனில் 24.71 சராசரியில் எட்டு போட்டிகளில் 173 ரன்களை அடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக நான்காவது அதிக ரன் அடித்தவராக உள்ளார்.