Page Loader
ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!
Write caption hereஆர்ச்சருக்கு பதிலாக கிரிஸ் ஜோர்டானை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ்

ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!

எழுதியவர் Sekar Chinnappan
May 09, 2023
03:25 pm

செய்தி முன்னோட்டம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவரது சகநாட்டவரான கிறிஸ் ஜோர்டானை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் செவ்வாய்க்கிழமை (மே 9) அறிவித்துள்ளது. இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிறிஸ் ஜோர்டான் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக வருகிறார். ஆர்ச்சரின் உடற்தகுதி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அவரது உடற்தகுதியில் கவனம் செலுத்த ஜோஃப்ரா நாடு திரும்புவார்." என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த கிறிஸ் ஜோர்டான், 2022 டிசம்பரில் நடந்த மினி ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாமல் போன நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post