டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேலை நியமிக்கலாம் : கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்
செய்தி முன்னோட்டம்
முன்னாள் இந்திய கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர், சமீப காலங்களில் பேட் மற்றும் பந்து இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அக்சர் படேல், எதிர்காலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வழிநடத்த வாய்ப்புள்ள வீரராக அக்சர் படேலை தேர்வு செய்துள்ளார்.
2022 டிசம்பரில் நடந்த பயங்கர கார் விபத்தில் ரிஷப் பந்த் பல காயங்களால் சீசனில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, ஐபிஎல் 2023ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்ட நிலையில், துணைக் கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட்டார்.
நடப்பு சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்வியைத் தழுவிய நிலையில், கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
What Sunil Gavaskar says about axar patel
அக்சர் படேல் குறித்து சுனில் கவாஸ்கர் பேட்டி
தற்போது 2 வெற்றிகளை மட்டுமே டெல்லி கேப்பிடல்ஸ் பெற்றுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சுனில் கவாஸ்கர் அளித்த பேட்டியில், "டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
அவர் நல்ல செயல்திறனுடன் உள்ளார். அவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணி பயனடையலாம்.
நீண்ட கால அடிப்படையில் இவை அனைத்தும் செய்யப்பட வேண்டும்." என்று கூறினார். தற்போது ஐபிஎல்லில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலும் அக்சர் படேல் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக ரன் குவித்தவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.