NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'கோலி கோலி' என ரசிகர்கள் கோஷமிட்டத்தை ரசித்தேன் : நவீன்-உல்-ஹக்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'கோலி கோலி' என ரசிகர்கள் கோஷமிட்டத்தை ரசித்தேன் : நவீன்-உல்-ஹக்
    'கோலி கோலி' என ரசிகர்கள் கோஷமிட்டத்தை ரசித்த நவீன்-உல்-ஹக்

    'கோலி கோலி' என ரசிகர்கள் கோஷமிட்டத்தை ரசித்தேன் : நவீன்-உல்-ஹக்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 25, 2023
    06:01 pm

    செய்தி முன்னோட்டம்

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் புதன்கிழமை (மே 25) மைதானத்தில் தான் இருக்கும்போது "கோலி, கோலி" என ரசிகர்கள் எழுப்பிய கோஷங்களை ரசித்ததாகக் கூறினார்.

    இது தனது அணிக்காக சிறப்பாக விளையாடுவதற்கான ஆர்வத்தை தனக்கு தந்ததாக அவர் மேலும் கூறினார்.

    முன்னதாக ஐபிஎல் 2023 தொடரில் மே 1 ஆம் தேதி லக்னோ ஏகனா மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையே நடந்த போட்டியில் விராட் கோலி மற்றும் நவீன்-உல்-ஹக் இடையே வாக்குவாதம் வெடித்தது.

    இந்த வாக்குவாதத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளில் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் விராட் கோலியை சீண்டி வந்தார்.

    naveen-ul-haq statement

    ஐபிஎல் 2023 தொடர் குறித்து பேசிய நவீன்-உல்-ஹக்

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோற்று வெளியேறிய நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய நவீன்-உல்-ஹக், "நான் அதை ரசிக்கிறேன்.

    மைதானத்தில் உள்ளவர்கள் கோலி பெயரையோ அல்லது வேறு எந்த வீரரின் பெயரையோ உச்சரிப்பது எனக்குப் பிடிக்கும். இது எனது அணிக்காக நன்றாக விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தைத் தருகிறது.

    அதே சமயம் நான் வெளியில் இருந்து வரும் சத்தம் அல்லது வேறு எதிலும் கவனத்தை சிதறவிடாமல் எனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.

    கம்பீர் இந்தியாவிற்கு ஒரு ஜாம்பவான், அவருக்கு இந்தியாவில் பெரிய மரியாதை உள்ளது. ஒரு வழிகாட்டியாக, பயிற்சியாளராக, கிரிக்கெட்டின் ஜாம்பவான் என, நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்." எனத் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    விராட் கோலி

    சமீபத்திய

    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது! பருவமழை
    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 ஐபிஎல் 2023
    டிசி vs எல்எஸ்ஜி : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : சொந்த மண்ணில் எல்எஸ்ஜியை வீழ்த்துமா சிஎஸ்கே? சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023

    ஐபிஎல்

    ஐபிஎல் 2023 : பர்ப்பிள் கேப் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்களின் பட்டியல்! ஐபிஎல் 2023
    டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி! இர்பான் பதான் பரிந்துரை! டெல்லி கேப்பிடல்ஸ்
    10 ஆண்டுகளுக்கு பிறகு தர்மசாலாவில் ஐபிஎல் போட்டி! மைதானம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்! ஐபிஎல் 2023
    பிபிகேஎஸ் vs டிசி : டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு! பஞ்சாப் கிங்ஸ்

    ஐபிஎல் 2023

    'தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தால் ஆச்சரியப்படுவேன்' : கெவின் பீட்டர்சன் ஐபிஎல்
    இறுதிக்கட்ட பரபரப்பு! ஐபிஎல் பிளேஆப் வாய்ப்பை பெறப்போகும் அணிகள் எவை?  ஐபிஎல்
    பிரபல கால்பந்து அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! பின்னணி என்ன? கால்பந்து
    ஜெயதேவ் உனட்கட்டிற்கு பதிலாக இளம் வீரர் சூர்யன்ஷ் ஷெட்ஜை ஒப்பந்தம் செய்தது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    விராட் கோலி

    கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக்கியது ஏன்? தேர்வுக்குழு தலைவர் அதிர்ச்சித் தகவல்! கிரிக்கெட்
    இன்சூரன்ஸ் கம்பெனியில் 2.5 கோடி முதலீடு! விராட் கோலி தகவல்கள் வெளியீடு! தொழில்நுட்பம்
    சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக விராட் கோலியின் புள்ளி விபரங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்
    முற்றும் மோதல் : விராட் கோலிக்கு பதிலடி கொடுத்த சவுரவ் கங்குலி ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025