INDvsNZ Semifinal : ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலியின் அபார செயல்திறன்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் புதன்கிழமை (நவம்பர் 15) நியூசிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு, 594 ரன்களுடன் அதிக ரன் குவித்த வீரராக உள்ளார். மேலும், லீக் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக 95 ரன்கள் எடுத்தார்.
ஒட்டுமொத்தமாக, நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 30 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், 56.59 என்ற குறிப்பிடத்தக்க சராசரியில் 1,528 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த எண்ணிக்கையில் ஐந்து சதங்கள் மற்றும் ஒன்பது அரைசதங்கள் அடங்கும்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோருக்கு அடுத்தபடியாக கோலி உள்ளார்.
Virat Kohli performance against New Zealand
நியூசிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் 1,000 ரங்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர்
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக 95 ரன்கள் எடுத்ததன் மூலம் விராட் கோலி, நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 1,000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனை படைத்தார்.
இந்த வகையில் கோலி தற்போது 71.78 என்ற தனி சராசரியுடன் 1,005 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எடுத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் வேறு எந்த பேட்டரும் 900 ரன்கள் கூட எடுத்ததில்லை.
சொந்த மண்ணில் 1,000 ஒருநாள் ரன்களைக் கடந்தது தவிர, சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்துக்கு எதிராக 1,500 ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார்.