INDvsNZ : சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி அணியில் சேர்ப்பு; டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு
ஞாயிற்றுக்கிழமை (அக்.22) நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவும், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமியும் சேர்க்கப்பட்டுள்ளனர். விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா:ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ். நியூசிலாந்து:டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.