Page Loader
Ind Vs Eng: கேப்டனாக 1000 ரன்களை கடந்த 10ஆவது வீரர் ரோஹித் ஷர்மா!
இன்றைய போட்டியில் சதம் விளாசிய ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில்

Ind Vs Eng: கேப்டனாக 1000 ரன்களை கடந்த 10ஆவது வீரர் ரோஹித் ஷர்மா!

எழுதியவர் Venkatalakshmi V
Mar 08, 2024
05:51 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டி தொடர்களை விளையாடி வருகிறது இங்கிலாந்து அணி. இந்த போட்டி தொடரின் இறுதி ஆட்டமான 5வது போட்டி, தற்போது தர்மசாலாவில் நடைபெற்றுவருகிறது. இந்திய அணியை வழிநடத்தி வரும் ரோஹித் ஷர்மா, இன்றைய போட்டியில் அரைசதம் அடித்த நிலையில், ஒரு கேப்டனாக 1000 ரன்களை கடந்த 10ஆவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்த போட்டியின் ஆரம்பத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 218 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், சதமும், சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரைசதமும் அடித்துள்ளனர். 2ஆவது நாள் முடிவில், இந்திய அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 473 ரன்கள் எடுத்துள்ளது.

embed

அரை சதம் தொட்ட தேவ்தத் படிக்கல்

Maiden Test ✅ Maiden Test fifty ✅ Welcome to Test cricket, Devdutt Padikkal 👏 👏 Follow the match ▶️ https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/pkDgbvtVIF— BCCI (@BCCI) March 8, 2024

embed

ரோஹித் ஷர்மாவின் சாதனையை கொண்டாடும் இந்திய அணியினர் 

Of hundreds and celebrations! 👏 🙌 Rohit Sharma 🤝 Shubman Gill Follow the match ▶️ https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @ImRo45 | @ShubmanGill | @IDFCFIRSTBank pic.twitter.com/yTZQ4dAoEe— BCCI (@BCCI) March 8, 2024