INDvsBAN முதல் டி20: 49 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி; புதிய சாதனை படைத்தது இந்திய அணி
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 6) குவாலியரில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணியை இளம் இந்திய அணி இலகுவாக வீழ்த்தியது. இது குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த முதல் சர்வதேச போட்டியாகும். இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி, 128 என்ற ஸ்கோரை 7 விக்கெட் வித்தியாசத்தில் சேஸ் செய்து வென்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 19.5 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய பேட்டர்கள் 49 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
குறைந்த பந்துகளில் இலக்கை எட்டி சாதனை
இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை படைத்தது. டி20 போட்டிகளில் 100க்கு மேல் ஸ்கோரை சேஸ் செய்த போது, அதிக பந்துகளை மீதம் வைத்து இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். வங்கதேசத்திற்கு எதிராக தற்போது 49 பந்துகள் மீதமிருக்கையில், இலக்கை எட்டி வெற்றி பெற்ற நிலையில், இதற்கு முன்னர் 2016இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 41 ரன்களை மீதம் வைத்து வென்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் 2010இல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 31 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி போட்டி உள்ளது. நான்காவது இடத்தில், 2010இல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 30 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி வென்ற போட்டி உள்ளது.