Page Loader
INDvsAUS Final : 'இறுதிப்போட்டிக்கு வந்ததே பெருசு'; மனம் திறந்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்
இறுதிப்போட்டிக்கு வரமாட்டோம் என நினைத்ததாகக் கூறிய பாட் கம்மின்ஸ்

INDvsAUS Final : 'இறுதிப்போட்டிக்கு வந்ததே பெருசு'; மனம் திறந்த ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 18, 2023
04:35 pm

செய்தி முன்னோட்டம்

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த பிறகு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்த அளவுக்கு முன்னேறும் என்று நினைக்கவில்லை என்று அதன் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலியா தோற்கடிக்கப்பட்டு, இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தின் தொடக்கத்தில் திணறியது. லக்னோவில் இலங்கை அணி 124/0 என்ற வலுவான நிலையில் பேட்டிங் செய்ய, ஆஸ்திரேலியா நம்பமுடியாத மறுபிரவேசத்தை அரங்கேற்றி அடுத்த 85 ரன்களில் இலங்கை அணியை மொத்தமாக சுருட்டியது. இது ஆஸ்திரேலிய பிஅணிக்கு மிகப்பெரிய பூஸ்ட்டை கொடுக்க, அதன் பிறகு எதிலும் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளனர்.

Pat Cummins says he didnt think to reach final after 1st two losses

இறுதிப்போட்டிக்கு வரமாட்டோம் என நினைத்ததாகக் கூறிய பாட் கம்மின்ஸ்

இரண்டு தோல்விகள் மற்றும் இலங்கை வீரர்கள் தங்கள் மூன்றாவது போட்டியில் நன்றாகத் தொடங்கிய நிலையில், அந்த நேரத்தில் அது எப்படி இருந்தது என்று கேட்டதற்கு, கம்மின்ஸ், அந்த நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு வரப்போவதில்லை என்று தான் உணர்ந்ததாகக் கூறினார். மேலும் பேசிய பாட் கம்மின்ஸ், "எங்களுக்கு பெரிய வெற்றிகள் எதுவும் இல்லை. ஒவ்வொரு வெற்றிக்கும் நாங்கள் போராட வேண்டியிருந்தது. ஆனால் வெற்றிக்கான வழியை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். மேலும் வெவ்வேறு வீரர்கள் வெவ்வேறு நேரங்களில் எழுந்து நிற்கிறார்கள். எனவே, அந்த நம்பிக்கையை எடுத்துக்கொண்டு இந்த போட்டியில் விளையாட உள்ளோம்." என்று கூறினார்.