
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
செய்தி முன்னோட்டம்
சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தற்போது வரை 8 தங்கம் உட்பட 32 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. இந்த முறை துப்பாக்கிச் சுடுதலிலேயே அதிக பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா.
இன்று காலை துப்பாக்கிச் சுடுதலில், 4 பதக்கங்களைக் கைப்பற்றிய நிலையில், துப்பாக்கிச் சுடுதல் தனிநபர் பிரிவில் மேலும் ஒரு பதக்கத்தை வென்றிருக்கிறது இந்தியா.
துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் ஆடவர்களுக்கான 50மீ ரைபிள் 3P தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார் இந்திய வீரர் ஐஷ்வரி டோமர்.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இது அவருக்கு நான்காவது பதக்கமாகும். முன்னதாக, 10மீ மற்றும் 50மீ குழுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார் அவர்.
embed
இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்:
Aishwary Tomar wins his 4th medal at the Asian Games! 🇮🇳#AsianGames2022 #AsianGames #Shooting #SKIndianSports pic.twitter.com/f1rRY5mHph— Sportskeeda (@Sportskeeda) September 29, 2023