LOADING...
டி20 உலகக்கோப்பை 2026: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுதான்; முக்கிய விவரங்கள்
டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுதான்

டி20 உலகக்கோப்பை 2026: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுதான்; முக்கிய விவரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 16, 2026
07:18 am

செய்தி முன்னோட்டம்

இலங்கையின் ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் பரபரப்பான லீக் போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா பதிவு செய்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அதிகாரப்பூர்வமாக சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

இஷான் கிஷன்

இஷான் கிஷனின் ருத்ரதாண்டவம்

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆரம்பத்திலேயே அபிஷேக் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், அதன் பிறகு களம் புகுந்த இஷான் கிஷன் பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் வெறும் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் இறுதியில் ரின்கு சிங், சிவம் துபே ஆகியோரின் பங்களிப்பால் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் பேட்டிங் சரிவு

176 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி, இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்தது. ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் டாப் ஆர்டரை நிலைகுலையச் செய்தனர். அக்ஷர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தியும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. உஸ்மான் கான் அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார்.

Advertisement

சாதனை

சாதனையும் தகுதியும்

இந்த வெற்றி மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக்கோப்பை மோதல்களில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. இதற்கு முன்பு 2012 இல் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே பெரிய சாதனையாக இருந்தது. தற்போது 2026 இல் 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இந்தியா புதிய சரித்திரம் படைத்துள்ளது. குரூப் ஏ பிரிவில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த போட்டியில் இந்தியா நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தான் அணி தனது அடுத்த போட்டியில் நமீபியாவிற்கு எதிராக ஏதேனும் அதிசயம் நடந்து தோல்வியைத் தழுவினால், அமெரிக்கா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இல்லையெனில், பாகிஸ்தானை தகுதி பெறும்.

Advertisement