இந்தியா vs நெதர்லாந்து உலகக்கோப்பையின் கடைசி லீக் போட்டி - டாஸை வென்றது இந்தியா
10 அணிகளை கொண்டு துவங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தனது இறுதி கட்டத்தினை நெருங்கியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இன்று(நவ.,12) இந்தியா, நெதர்லாந்து இடையேயான கடைசி லீக் போட்டி நடக்கிறது. இந்த போட்டியானது பெங்களூர் எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதுவரை நடந்த 8 லீக் போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் இந்தியா வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நெதர்லாந்து கிரிக்கெட் அணி 6 போட்டிகளில் தோல்வியடைந்து, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றிப்பெற்று கடைசி இடத்தினை பிடித்துள்ளது. இந்நிலையில் தற்போது நடக்கவுள்ள இந்த கடைசி லீக் போட்டியில் டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்'ஐ தேர்வு செய்துள்ளது.