LOADING...
டி20 உலகக் கோப்பை: இந்தியா vs நமீபியா போட்டி முன்னோட்டம்; ஆடும் லெவன் மற்றும் மைதான நிலவரம்
நடப்புச் சாம்பியன் இந்தியா, இன்று டெல்லியில் நமீபியாவை எதிர்கொள்கிறது

டி20 உலகக் கோப்பை: இந்தியா vs நமீபியா போட்டி முன்னோட்டம்; ஆடும் லெவன் மற்றும் மைதான நிலவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 12, 2026
04:21 pm

செய்தி முன்னோட்டம்

2026 டி20 உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சவாலை சந்திக்க தயாராகிவிட்டது இந்திய அணி. அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் கடும் போராட்டத்திற்கு பிறகு வெற்றியை பதிவு செய்த நடப்புச் சாம்பியன் இந்தியா, இன்று டெல்லியில் நமீபியாவை எதிர்கொள்கிறது. நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் வருகை அணிக்குப் பலம் சேர்த்தாலும், அதிரடி வீரர் அபிஷேக் சர்மாவின் உடல்நிலை கவலை அளிப்பதாக உள்ளது. அரையிறுதி பாதையை உறுதி செய்யவும், ரன் ரேட்டை அதிகரிக்கவும் இந்த போட்டி இந்தியாவுக்கு மிக முக்கியமானது.

விவரங்கள்

போட்டி விவரங்கள்

நேரம்: இன்று இரவு 7:00 மணி (டாஸ் - 6:30 மணி). இடம்: அருண் ஜெட்லி ஸ்டேடியம், புது டெல்லி. நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார்

அப்டேட்

முக்கிய அப்டேட்கள்

உடல்நல குறைவு காரணமாக அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாத நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்று அணிக்கு திரும்புகிறார். அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா கடுமையான வயிற்றுத் தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். எனினும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியப் போட்டியைக் கருத்தில்கொண்டு, அவருக்கு இன்று ஓய்வு அளிக்கப்படலாம். அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் தொடக்க வீரராகக் களமிறங்க வாய்ப்புள்ளது.

Advertisement

வானிலை

ஆடுகளம் மற்றும் வானிலை

ஆடுகளம்: டெல்லி மைதானம் வழக்கமாக பேட்டிங்கிற்கு சாதகமானது. முதலில் பேட்டிங் செய்யும் அணி 160+ ரன்கள் எடுப்பது சவாலாக இருக்கும். வானிலை: இன்று இரவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை சுமார் 17°C ஆக இருக்கும். மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவு (10%).

Advertisement

ஆடும் லெவன்

இந்தியாவின் உத்தேச ஆடும் லெவன்

இஷான் கிஷன் (WK), சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (C), ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், சிவம் துபே, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி.

Advertisement