
இந்தியா vs ஆஸ்திரேலியா T20I : விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் ருதுராஜ் கெய்க்வாட்
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) நடைபெற உள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலியின் மிகப்பெரிய டி20 சாதனையை முறியடிக்கும் முனைப்பில் உள்ளார்.
இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் படைத்துள்ளார்.
அவர் 2021இல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் போது 231 ரன்களை குவித்திருந்தார்.
விராட் கோலி எடுத்த இந்த ரன்களே இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்களாக இருந்து வரும் நிலையில், தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் மொத்தமாக 213 ரன்கள் எடுத்துள்ளார்.
Ruturaj Gaikwad in cusp of breaking Virat Kohli T20I record
சாதனையை முறியடிக்க 19 ரன்கள் மட்டுமே தேவை
டி20 இருதரப்பு தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி வைத்திருந்தாலும், இரண்டாவது இடத்தில் ருதுராஜ் கெய்க்வாட் இல்லை.
கேஎல் ராகுல் 2020ல் நடந்த இருதரப்பு போட்டியின் போது நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளில் 224 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், 213 ரன்களுடன் உள்ள ருதுராஜ் கெய்க்வாட் ஐந்தாவது போட்டியில் 19 ரன்கள் எடுத்தால், இருவரையும் பின்னுக்குத் தள்ளி, அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
சமீபகாலமாக ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த ஃபார்மில் உள்ளதால், ருதுராஜ் கெய்க்வாட் இந்த சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.