NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது T20I : ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது T20I : ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயம்
    ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயம்

    இந்தியா vs ஆஸ்திரேலியா 5வது T20I : ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 03, 2023
    08:48 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 161 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3) பெங்களூர் எம் சின்னச்சாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 10 ரன்களும் எடுத்து அவுட்டாகி வெளியேறினர்.

    எனினும், மூன்றாவது இடத்தில் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு புறம் நிலைத்து நின்று அணியை மீட்டெடுத்து ஸ்கோரை உயர்த்தினார்.

    India vs Australia 5th T20I Australia need 161 runs to win

    ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும் அவுட்டாக 10வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்களுடன் தடுமாற ஆரம்பித்தது.

    எனினும், அதன் பின்னர் ஷ்ரேயாஸுடன் ஜோடி ஜிதேஷ் ஷர்மா 24 ரன்களும், அதன் பின்னர் அக்சர் படேல் 31 ரன்களும் எடுத்தனர்.

    மறுமுனையில் அவுட்டாகாமல் நிலைத்து நின்ற ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து 53 ரன்களில் இருந்தபோது கடைசி ஓவரில் அவுட்டானார்.

    இதன் மூலம், இந்திய அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துது.

    ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் பென் ட்வார்ஷூயிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா vs ஆஸ்திரேலியா
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா vs ஆஸ்திரேலியா

    INDvsAUS 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; வரலாறு படைக்கும் வாய்ப்பை இழந்தது இந்தியா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    INDvsAUS ஒருநாள் உலகக்கோப்பை: சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக தயாராகும் சேப்பாக்கம் மைதானம் ஒருநாள் உலகக்கோப்பை
    இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டிக்கு மழையால் பாதிப்பா? வானிலை முன்னறிவிப்பு இதுதான் ஒருநாள் உலகக்கோப்பை
    கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று சென்னை மெட்ரோவில் இலவச பயணம் ஒருநாள் உலகக்கோப்பை

    டி20 கிரிக்கெட்

    IPL 2024 : செயல்படாத ப்ரித்வி ஷாவை அணியிலேயே தக்கவைக்க டெல்லி கேப்பிடல்ஸ் முடிவு ஐபிஎல்
    INDvsAUS 2வது டி20 : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு இந்தியா vs ஆஸ்திரேலியா
    IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து டுவைன் பிரிட்டோரியஸ் விலகல் ஐபிஎல் 2024
    INDvsAUS 2வது டி20 : ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது இந்தியா இந்தியா vs ஆஸ்திரேலியா

    கிரிக்கெட்

    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா T20I : முகேஷ் குமாருக்கு பதில் தீபக் சாஹர் அணியில் சேர்ப்பு; காரணம் இதுதான் இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : ருதுராஜ் சதம்; ஆஸ்திரேலிய அணிக்கு 223 ரன்கள் இலக்கு இந்தியா vs ஆஸ்திரேலியா
    இதே நாளில் அன்று : டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வீரராக 1,000 ரன்கள் எட்டி சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்த தினம் சச்சின் டெண்டுல்கர்

    கிரிக்கெட் செய்திகள்

    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : வானிலை அறிக்கை இந்தியா vs ஆஸ்திரேலியா
    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : இந்திய அணியில் தமிழக ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு? இந்தியா vs ஆஸ்திரேலியா
    சாம்பியன்ஸ் டிராபி தொடர் வேறு நாட்டுக்கு மாற்றம்? பாகிஸ்தானை நக்கல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்  சாம்பியன்ஸ் டிராபி
    இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I : ஆறு வீரர்களை அணியிலிருந்து விடுவித்தது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025