இந்தியா vs ஆஸ்திரேலியா ODI & T20I மகளிர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே நடந்த மகளிர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பெற்ற வரலாற்று வெற்றிக்கு பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்த இரு தொடர்களுக்குமான தலா 16 பேர் கொண்ட இரண்டு அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திங்கட்கிழமை (டிசம்பர் 25) அறிவித்துள்ளது. ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு அணிகளுக்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் இருப்பார். ஒருநாள் போட்டிகள் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 2இலும், டி20 போட்டிகள் ஜனவரி 5, 7 மற்றும் 9இலும் நடைபெற உள்ளன.
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி (ஒருநாள் கிரிக்கெட் தொடர்) : ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர், சாது, பூஜா வஸ்த்ரகர், ஸ்னே ராணா, ஹர்லீன் தியோல். இந்திய கிரிக்கெட் அணி (டி20 கிரிக்கெட் தொடர்) : ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னத் காஷ்யப், சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர், சாது, பூஜா வஸ்த்ரகர், கனிகா அஹுஜா, மின்னு மணி.