
இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்றாவது T20I: முன்னோட்டம் மற்றும் புள்ளிவிவரங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) அன்று கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இரண்டு போட்டிகளிலும் இந்தியா 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது.
இந்நிலையில், மூன்றாவது போட்டியிலும் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ள நிலையில், மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலியா தொடர் தோல்வியை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
India vs Australia T20I Place Time Live Stream Where to watch Pitch and weather report
இடம், நேரம் மற்றும் ஒளிபரப்பு விவரங்கள், பிட்ச் ரிப்போர்ட் மற்றும் வானிலை அறிக்கை
3வது டி20 போட்டி அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் சினிப்ளெக்ஸில் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம். மேலும் ஜியோசினிமா ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலமும் கண்டுகளிக்கலாம்.
இங்குள்ள ஆடுகளங்கள் பொதுவாக பேட்டிங்கிற்கு ஏற்றதாக இருக்கும். அதே சமயம் சீமர்கள் ஆரம்பத்தில் சில வாய்ப்புகளைப் பெறலாம்.
ஆட்டம் தொடர தொடர பனிப்பொழிவு போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அக்யூவெதரின் கருத்துப்படி, பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்துள்ள பகுதியில் மழைப்பொழிவுக்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளது.
India vs Australia T20I head to head stats
இந்தியா vs ஆஸ்திரேலியா நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரங்கள்
இரு அணிகளும் இதுவரை 28 டி20 கிரிக்கெட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இதுவரை 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய அணி 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மட்டும் எந்த முடிவும் இல்லாமல் முடிந்துள்ளது.
இதற்கிடையே இந்திய மண்ணில் இரு அணிகளும் இதுவரை 12 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளன.
இந்த 12 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகளில் மட்டுமே நான்கில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
India vs Australia T20I Key stats
இந்தியா vs ஆஸ்திரேலியா முக்கிய புள்ளிவிபரங்கள்
சிறப்பான ஃபார்மில் இருக்கும் சூர்யகுமாருக்கு டி20 கிரிக்கெட்டில் 2,000 ரன்களை எட்ட இன்னும் 60 ரன்கள் தேவை.
மூன்றாவது போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினால் இந்தச் சாதனையை மிக வேகமாக எட்டிய இந்தியராக அவர் இருக்கலாம்.
சர்வதேச கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை எட்ட ஆடம் ஜம்பாவுக்கு இன்னும் மூன்று விக்கெட்டுகள் தேவையாகும்.
இதேபோல், மேலும் ஒரு விக்கெட்டை எடுத்தால், அக்சர் படேல் டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டுவார்.
டி20 கிரிக்கெட்டில் 450 சிக்சர்கள் எனும் மைல்கல்லை எட்ட கிளென் மேக்ஸ்வெல்லுக்கு இன்னும் ஆறு சிக்ஸர் அடிக்க வேண்டும்.
India vs Australia 3rd T20I expected playing xi
எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
இந்திய கிரிக்கெட் அணி : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி : ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, மற்றும் தன்வீர் சங்கா.