ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!
அமெச்சூர் கபடி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா வரவிருக்கும் 11வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023க்கான 14 பேர் கொண்ட ஆடவர் இந்திய அணியை அறிவித்துள்ளது. இந்த போட்டி தென் கொரியாவின் பூசானில் ஜூன் 27 முதல் 30 வரை நடைபெற உள்ளது. ப்ரோ கபடி லீக்கின் மிக வெற்றிகரமான ரைடர் பர்தீப் நர்வால் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் தீபக் நிவாஸ் ஹூடா ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை. பிகேஎல் 9 சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியன் மற்றும் தற்போதைய தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் அஷன் குமார் ஆகியோர் தலைமைப் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் தேசிய பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கபடி அணி வீரர்களின் பட்டியல்
ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் கபடி அணி, கடந்த எட்டு சீசன்களில் ஏழு தங்கப் பதக்கங்களை வென்று, வெற்றிகரமான அணியாக உள்ளது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஈரானில் உள்ள கோர்கனில் நடைபெற்ற போட்டியில் இந்தியா இறுதிப்போட்டியில் 36-22 என்ற புள்ளிக்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி வீரர்கள் : அர்ஜுன் தேஷ்வால், பவன் செஹ்ராவத், நவீன் குமார், சச்சின், அஸ்லாம் இனாம்தார், மோஹித் கோயத், சுனில் குமார், பர்வேஷ் பைன்ஸ்வால், நிதின் ராவல், நிதேஷ் குமார், சுர்ஜித் சிங் & விஷால் பரத்வாஜ். ஸ்டாண்ட்பை வீரர்கள் : விஜய் மாலிக் & சுபம் ஷிண்டே.