உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி : எதிர்பார்க்கப்படும் இந்திய பிளேயிங் 11
செய்தி முன்னோட்டம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் புதன்கிழமை (ஜூன் 7) மோதலை தொடங்க உள்ளது.
கடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிகளிலும் இந்தியா மிகவும் சீரான அணியாக இருந்து வருகிறது.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் முக்கிய ஒயிட்-பால் போட்டிகளில் நாக் அவுட் கட்டங்களை எட்டியுள்ளது.
எனினும் இந்த காலகட்டத்தில் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.
கடைசியாக 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்றதுதான் இந்தியாவின் கடைசி ஐசிசி கோப்பையாகும்.
இந்நிலையில், தற்போது வலுவான பிளேயிங் லெவனை கொண்டுள்ள இந்தியா, 10 ஆண்டு கால சோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
expected playing 11
எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11
பிளேயிங் லெவன் குறித்து, குறிப்பாக விக்கெட் கீப்பர் பதவி குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டு டிசம்பரில் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் மற்றும் ஐபிஎல்லில் காயமடைந்த கேஎல் ராகுல் அணியில் இடம் பெறாத நிலையில், கேஎஸ் பாரத்துக்கு விக்கெட் கீப்பர் பொறுப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11 இந்திய அணி : ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ். பாரத், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ரவிச்சந்திரன், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ்.