CT 2025: பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் இழந்து ஒருநாள் கிரிக்கெட்டில் சோகமான சாதனை படைத்த இந்திய அணி
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி டாஸை இழந்து சோகமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.
இந்த முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வானிடம் கேப்டன் ரோஹித் ஷர்மா டாஸ் இழந்தார்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. மேலும் காயமடைந்த ஃபகார் ஜமானுக்கு பதிலாக இமாம்-உல்-ஹக்கை விளையாடும் லெவன் அணியில் சேர்த்தது.
இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான முந்தைய போட்டியில் விளையாடிய அதே விளையாடும் லெவன் அணியுடன் களமிறங்கியுள்ளது.
டாஸ் இழந்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் சோகமான சாதனை படைத்த வரலாற்றை பார்க்கலாம்.
டாஸ் இழப்பு
12வது முறையாக டாஸ் இழப்பு
இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டியில் டாஸ் இழந்தது, இந்தியாவுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியான 12வது டாஸ் இழப்பாகும்.
குறிப்பாக, 2023 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்தியா எந்த ஒருநாள் போட்டியிலும் டாஸ் வெல்லவில்லை.
இதன் மூலம், 2011 மற்றும் 2013 க்கு இடையில் 11 முறை டாஸ் இழந்து துரதிர்ஷ்டவசமான சாதனையை வைத்திருந்த நெதர்லாந்தின் சாதனையை முறியடித்தது.
இந்த சோகம் இருந்த போதிலும், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தற்போது வலுவான நிலையிலேயே உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியின் முந்தைய போட்டியில் வங்கதேசத்தை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.