ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை விளையாட்டில், பெண்களுக்கான 54 கிலோ எடைப்பரிவில் போட்டியிட்ட இந்திய வீராங்கனை ப்ரீத்தி, வெண்கலப் பதக்கம் வெண்றிருக்கிறார். அரையிறுதிச் சுற்றில் சீனாவைச் சேர்ந்த யுவான் சாங்கை எதிர்கொண்ட ப்ரீத்தி, 0-5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியைத் தழுவி இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறார். 2021 டோக்கிய ஒலிம்பிக்ஸ் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின், 75 கிலோ பிரிவில் அரையிறுதிச் சுற்றில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் தன்னைப் எதிர்த்துப் போட்டியிட்ட பெய்சன் மானிக்கனை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார். இந்த வெற்றியைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கும் மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலம்:
Many congratulations to Preeti on winning the #BronzeMedal in the Women's 54kgs Boxing event. Let's #Cheer4india 🇮🇳 #WeAreTeamIndia | #IndiaAtAG22 pic.twitter.com/whHibezMYL— Team India (@WeAreTeamIndia) October 3, 2023