INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் வரலாற்று சாதனை, என்ன தெரியுமா?
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் புதன்கிழமையன்று (செப்டம்பர் 27) இந்தியாவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில், இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளிட்ட அனைத்து முன்னணி வீரர்களும் விளையாட உள்ளனர். முன்னதாக, முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், மூன்றாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால், ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்ய முடியும். ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளை பொறுத்தவரை இதுவரை இருதரப்பு ஒருநாள் போட்டிகளில் ஒருமுறை கூட இரு அணிகளுமே எதிர்தரப்பை ஒயிட்வாஷ் செய்யாத நிலையில், இது வரலாற்றுச் சாதனையாக மாறும்.
INDvsAUS மூன்றாவது ஒருநாள் போட்டி : எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
ஒருநாள் உலகக்கோப்பை தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடன் மோதும் கடைசி போட்டியாக இது அமைந்துள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா : ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா/குல்தீப் யாதவ், அஸ்வின் ரவிச்சந்திரன், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ். ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன்/கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க்/சீன் அபோட், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா.