LOADING...
டி20 உலகக்கோப்பை 2026: அமெரிக்காவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கான இந்தியா ஏ அணி அறிவிப்பு
அமெரிக்காவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கான இந்திய அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை 2026: அமெரிக்காவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கான இந்தியா ஏ அணி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 02, 2026
02:58 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு முன்னதாக, அமெரிக்கா மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ள இந்தியா ஏ அணியை பிசிசிஐ இன்று (பிப்ரவரி 2, 2026) அறிவித்துள்ளது. இந்த அணி இளம் திறமைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

திலக் வர்மா

திலக் வர்மாவின் வருகையும் எதிர்பார்ப்பும்

இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரர் திலக் வர்மா ஆவார். சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது குணமடைந்துள்ள அவர், தனது உடல் தகுதியை நிரூபிக்க இந்தப் பயிற்சி ஆட்டத்தில் களம் இறங்குகிறார். இவர் சீனியர் உலகக்கோப்பை அணியிலும் இடம் பெற்றுள்ளதால், இந்த ஆட்டம் அவருக்கு மிக முக்கியமானது. மேலும், காயம் காரணமாக விலகி இருந்த வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மற்றும் ரியான் பராக் ஆகியோரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அட்டவணை

போட்டி அட்டவணை மற்றும் இடம்

இந்தியா ஏ அணி மொத்தம் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. முதல் போட்டி (பிப்ரவரி 2) அமெரிக்காவிற்கு எதிராக நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி (பிப்ரவரி 6) நமீபியாவிற்கு எதிராக பெங்களூருவில் உள்ள பிசிசிஐ அகாடமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய சீனியர் அணி தனது முதல் உலகக்கோப்பை ஆட்டத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் அமெரிக்காவை எதிர்கொள்ள உள்ளது.

Advertisement

வீரர்கள்

இந்தியா ஏ அணி வீரர்கள் பட்டியல்

ஆயுஷ் பதோனி (கேப்டன்), நமன் தீர், அசுதோஷ் சர்மா, பிரியான்ஷ் ஆர்யா, நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ரியான் பராக், மானவ் சுதர், அசோக் சர்மா, ஊர்வில் படேல் (விக்கெட் கீப்பர்), குர்ஜப்னீத் சிங், விப்ராஜ் நிகம், ரவி பிஷ்னோய், கலீல் அகமது, மயங்க் யாதவ்.

Advertisement