ஆஸ்திரேலிய 'ஏ' அணியிடம் தோல்வியை தழுவியது இந்திய மகளிர் ஹாக்கி அணி!
வியாழன் (மே 25) அன்று அடிலெய்டில் உள்ள மேட் ஸ்டேடியத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் மகளிர் இந்திய ஹாக்கி அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆஸ்திரேலிய ஏ அணி 2கோல்கள் அடித்த நிலையில், இந்திய அணி கோல் அடிக்காமல் பின்தங்கி இருந்தது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய ஏ அணி மேலும் ஒரு கோல் அடித்த நிலையில், இந்திய அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடிக்க போட்டி பரபரப்பாக மாறியது. எனினும் அதன் பின்னர் இந்திய அணியால் கோல் அடிக்க முடியாமல் போனதால் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. அடுத்த போட்டி மே 27ஆம் தேதி நடக்க உள்ளது.