
தந்தை-மகனுக்கு எதிராக விளையாடும் 2வது இந்தியர்! சச்சின் சாதனையை சமன் செய்யும் விராட் கோலி
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தொடங்கும்போது, சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் தனித்துவமான சாதனையை, விராட் கோலி முறியடிக்க உள்ளார்.
புதன்கிழமை (ஜூலை 12) வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம், கிரிக்கெட் வரலாற்றில், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் தந்தை-மகன் ஜோடிக்கு எதிராக விளையாடும் இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை, விராட் கோலி பெறுவார்.
சச்சின் டெண்டுல்கர், 2011இல் ஆஸ்திரேலியாவில் ஷான் மார்ஷை எதிர்கொண்டபோது இந்த சாதனையை படைத்த முதல் இந்தியர் ஆனார்.
முன்னதாக, கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு முன்னர், அவர் ஷான் மார்ஷின் தந்தை ஜெஃப் மார்ஷுக்கு எதிராக விளையாடி இருந்தார்.
kohli to become second indian after sachin
ஷிவ்நரைன் - தேஜ்நரைன் சந்தர்பாலுக்கு எதிராக விராட் கோலி
விராட் கோலி, 2011 வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது அந்த அணியின் ஜாம்பவான் ஷிவ்நரைன் சந்தர்பாலுக்கு எதிராக விளையாடினார்.
இந்நிலையில், புதன்கிழமை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடும் 11 அணியில், தேஜ்நரைன் சந்தர்பாலுக்கு இடம் கிடைத்தால், வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை மற்றும் மகனுக்கு எதிராக விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
ஐந்து டி20 போட்டிகளில், கடைசி 2 போட்டிகள், அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.