Page Loader
ஃபிரஞ்சு ஓபனில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்
ஃபிரஞ்சு ஓபன் மகளிர் இறுதிப்போட்டியில் கரோலினா முச்சோவாவை எதிர்கொள்ளும் இகா ஸ்வியாடெக்

ஃபிரஞ்சு ஓபனில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 09, 2023
12:32 pm

செய்தி முன்னோட்டம்

ஃபிரஞ்சு ஓபன் மகளிர் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று பிரபல டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவர் 6-2, 7-6 என்ற செட் கணக்கில் பிரேசிலின் ஹடாட் மியாவை அரையிறுதியில் தோற்கடித்து மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அடுத்து இறுதிப்போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கரோலினா முச்சோவாவை எதிர்கொள்கிறார். இகா ஸ்வியாடெக் முதல் முறையாக 2020 இல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதோடு கோப்பையையும் கைப்பற்றினார். 2021 இல் இறுதிப்போட்டிக்கு முன்னேறாத நிலையில், கடந்த ஆண்டு 2022 இல் மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதோடு, இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றினார். இந்த முறை மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளார்.

Iga swiatek performance in 2023 season

2023 இல் இகா ஸ்வியாடெக்கின் புள்ளிவிபரம்

2023 சீசனை ஆஸ்திரேலிய ஓபனில் தொடங்கிய இகா ஸ்வியாடெக் இதுவரை 34 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் நான்காவது சுற்றில் தோல்வியைத் தழுவினாலும், கத்தார் ஓபன் மற்றும் ஸ்டட்கார்ட் ஓபன் ஆகிய இரண்டு பட்டங்களையும் வென்றுள்ளார். மாட்ரிட் மாஸ்டர்ஸ் மற்றும் துபாய் ஓபன் போட்டிகளில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவினார். இந்தியன் வெல்ஸில் அரையிறுதியிலும் இத்தாலிய ஓபன் காலிறுதியிலும் தோல்வியடைந்தார். இதற்கிடையே ஃபிரஞ்சு ஓபன் போட்டியில் இகா ஸ்விடெக் 27 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளார். மொத்தம் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை வென்ற ஸ்வியாடெக், ஒட்டுமொத்தமாக தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையில் 60 போட்டிகளில் வெற்றியும் 13 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளார்.