டி20 உலகக் கோப்பை அரை இறுதி: இந்தியா - இங்கிலாந்து மோதும் ஆட்டத்திற்கு நடுவர் யார்?
செய்தி முன்னோட்டம்
தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் அரை இறுதி ஆட்டங்கள் மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளை வழிநடத்த அனுபவம் வாய்ந்த நடுவர்களை ஐசிசி நியமித்துள்ளது. ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 அரையிறுதி போட்டிக்கான போட்டி அதிகாரிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்துள்ளது. மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெறும் நாக் அவுட் மோதல்களுக்கு முறையே ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஆண்டி பைக்ராஃப்ட் ஆகியோரை நடுவர்களாக நியமித்துள்ளது.
விவரங்கள்
நடுவர் விவரங்கள்
முதல் அரை இறுதி (தென்னாப்பிரிக்கா vs நியூசிலாந்து): மார்ச் 4 கள நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் அலெக்ஸ் வார்ப். மூன்றாவது நடுவர்: இந்தியாவின் நிதின் மேனன். நான்காவது நடுவர்: ராட் டக்கர். போட்டி நடுவர் (Referee): ஜவகல் ஸ்ரீநாத். இரண்டாவது அரை இறுதி (இந்தியா vs இங்கிலாந்து): மார்ச் 5 கள நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி மற்றும் அல்லாஹுதீன் பாலேக்கர். மூன்றாவது நடுவர்: அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக். நான்காவது நடுவர்: பால் ரீஃப்பல். போட்டி நடுவர் (Referee): ஆண்டி பைக்ராஃப்ட். மார்ச் 8-ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறப்போகும் அந்த இரண்டு அணிகள் எவை என்பதைத் தீர்மானிக்கும் முக்கியப் போட்டிகள் இவை.