LOADING...
இந்தியாவிற்கு வெளியே டி20 உலகக்கோப்பை நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்த ICC
வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்த ICC

இந்தியாவிற்கு வெளியே டி20 உலகக்கோப்பை நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்த ICC

எழுதியவர் Venkatalakshmi V
Jan 07, 2026
10:22 am

செய்தி முன்னோட்டம்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே நடத்த வேண்டும் என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (BCB) கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நிராகரித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி தனது நாட்டு அணி விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் விடுத்த கோரிக்கையை ஐசிசி ஏற்கவில்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி போட்டிகள் இந்தியாவிலேயே நடைபெறும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஒருவேளை வங்கதேச அணி இந்தியாவில் விளையாட மறுத்தால், அந்தப் போட்டிகளுக்கான புள்ளிகள் பறிமுதல் செய்யப்படும் (Forfeit) என்றும் ஐசிசி எச்சரித்துள்ளது.

பின்னணி

இடமாற்றத்திற்கு கோரிக்கை விடுத்த பங்களாதேஷ்

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் ரீதியான உறவில் விரிசல் ஏற்பட்டது. வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கண்டித்து பிசிசிஐ இந்த நடவடிக்கையை எடுத்தது. இதற்குப் பதிலடியாக, வங்கதேச அரசு தனது நாட்டில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பத் தடை விதித்துள்ளது. ஐபிஎல்-லிலிருந்து நீக்கப்பட்ட முஸ்தபிசுர் ரஹ்மான், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் இணைந்துள்ளார்.

Advertisement