பாரிஸ் ஒலிம்பிக் செயல்பாட்டையும் பாதித்துள்ள மைக்ரோசாப்ட் முடக்கம்
பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரமே உள்ள நிலையில், உலகளாவிய மைக்ரோசாப்ட் கணினி அமைப்புகள் செயலிழப்புடன் தொடர்புடைய சிக்கல்களை எதிர்கொண்டதாக பாரிஸ் ஒலிம்பிக் அமைப்பாளர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். உலகளவில் விண்டோஸ் 10 செயல்பாடு முடங்கியதை அடுத்து, பல கணினி அமைப்புகளில் பெரும் செயலிழப்பு, விமான சேவைகள் பாதிப்பு, விமானங்கள் தரையிறக்கம், தொலைக்காட்சி ஒளிபரப்புகள் தடம் புரண்டது மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நகரங்களில் தொலைத்தொடர்புகளையும் பாதித்தது. இந்த வரிசையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்களும் இந்த சிக்கலில் பாதிக்கப்பட்டுள்ளனர். "பாரிஸ் 2024 மைக்ரோசாப்ட் மென்பொருளை பாதிக்கும் உலகளாவிய தொழில்நுட்ப சிக்கல்களை அறிந்திருக்கிறது. இந்த சிக்கல்கள் பாரிஸ் 2024 இன் IT செயல்பாடுகளை பாதிக்கின்றன," அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
விண்டோஸ் தொர்பான IT சிக்கல்களை சமாளிக்க மாற்று திட்டங்கள்
"பாரிஸ் 2024 இன் தொழில்நுட்பக் குழுக்கள் இந்த சிக்கல்களின் தாக்கங்களைத் தணிக்க முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன, மேலும் செயல்பாடுகளைத் தொடர மாற்று திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்" என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர். பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவின் மற்றொரு நபர் கூறுகையில், அடுத்த வெள்ளிக்கிழமை செயின் நதியில் நடக்கும் விழாவிற்கு முன் சிலரால் பேட்ஜ்களை எடுக்க முடியாமல் போனதால், அவர்களின் அங்கீகார முறையைப் பாதிக்கப்பட்டுள்ளது என்றார். விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், இது விளையாட்டு வீரர்களின் வருகையையும் இது பாதிக்கலாம் என்று ஆதாரம் மேலும் கூறியது.