பிரீமியர் லீக்கில் 200 கோல்கள் அடித்த மூன்றாவது வீரர்! ஹாரி கேன் புது சாதனை!
ஹாரி கேன் தனது 200வது பிரீமியர் லீக் கோலை அடித்தார். இதன் மூலம் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் வரலாற்றில் இந்த சாதனையை பதிவு செய்த 3வது வீரர் எனும் சிறப்பை ஹாரி கேன் பெற்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 5) மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணிக்காக விளையாடிய ஹாரி கேன், 15வது நிமிடத்தில் கோல் அடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளில் ஆலன் ஷீரர் மற்றும் வெய்ன் ரூனி ஆகியோர் மட்டுமே 200 கோல்களுக்கும் மேல் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
200 கோல்கள்
மிக வேகமாக 200 பிரீமியர் லீக் கோல்கள் அடித்த ஹாரி கேன்
ஹாரி கேன் தனது 304வது பிரீமியர் லீக் ஆட்டத்தில் தனது 200வது கோலை அடித்தார். இதன் மூலம் மிக வேகமாக இந்த மைல்கல்லை எட்டியவர் என்ற சாதனையையும் ஹாரி கேன் படைத்துள்ளார். இதற்கு முன்பாக ஷீரர் 306 போட்டிகளில் 200 கோல்களை எட்டினார். மேலும் ரூனி 462 போட்டிகளில் இந்த சாதனையை எட்டியிருந்தார். கேன் தனது 267வது கோலை டோட்டன்ஹாம் அணிக்காக அடித்தார். இதன் மூலம் ஜிம்மி க்ரீவ்ஸின் 266 கோல் சாதனையை முந்தியுள்ளார். டோட்டன்ஹாம் அணிக்காக அனைத்து விதமான லீக் போட்டிகளிலும் சேர்த்து, தனது 416வது போட்டியில் இந்த சாதனை படைத்தார்.