Loading...
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடர்: இந்தியா ஏ அணியில் ஹார்திக் பாண்டியா கம்பேக்
இந்தியா ஏ அணியில் ஹார்திக் பாண்டியா கம்பேக்

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடர்: இந்தியா ஏ அணியில் ஹார்திக் பாண்டியா கம்பேக்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2026
04:40 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான 32 வயதான ஹார்திக் பாண்டியா, அடுத்த மாதம் (அக்டோபரில்) மீண்டும் கிரிக்கெட் களத்திற்குத் திரும்பவுள்ளார். 2026 ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஓய்வில் இருந்த அவர், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது பங்கேற்பு உடற்தகுதியை பொறுத்தே அமையும்.

கேப்டன்கள் அறிவிப்பு

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான கேப்டன்கள் அறிவிப்பு

பிசிசிஐ (BCCI) புதன்கிழமை அன்று ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான சிவப்புப் பந்து மற்றும் வெள்ளைப் பந்து தொடருக்கான இந்தியா ஏ அணிகளை அறிவித்தது.

புதுச்சேரியில் நடைபெறவுள்ள இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய ஏ அணிக்குத் தேவ்தத் படிக்கல் கேப்டனாகவும், தமிழக வீரர் சாய் சுதர்சன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவும், தேவ்தத் படிக்கல் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள்.

முக்கிய வீரர்கள்

அணியில் இடம் பிடித்துள்ள முக்கிய வீரர்கள்

டெஸ்ட் அணியில் ஷேக் ரஷீத், அன்ஷுல் கம்போஜ் மற்றும் ஐபிஎல் 2026-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஜொலித்த விதர்பா வீரர் பிரபுல் ஹிங்கே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் அணியில் ஹார்திக் பாண்டியா, ரஜத் படிதார், பிரியான்ஷ் ஆர்யா, நமன் திர், பிரப்சிம்ரன் சிங், நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த குர்ஜப்னீத் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் செப்டம்பர் 22-25 மற்றும் செப்டம்பர் 29 - அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் நடைபெறவுள்ளன.

அதே மைதானத்தில் அக்டோபர் 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன.

ADVERTISEMENT