ஐபிஎல் 2025: பேட்டிங் பயிற்சியாளராக பார்தீவ் படேலை நியமித்துள்ள குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் 2022 சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக பார்த்திவ் படேலை தனது அணியின் பேட்டிங் மற்றும் உதவி பயிற்சியாளராக அறிவித்துள்ளது. முன்னதாக GT உரிமையை விட்டு வெளியேறிய கேரி கிர்ஸ்டனுக்குப் பதிலாக பார்த்தீவ் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸுக்குச் செல்வதற்கு முன், பார்த்தீவ் படேல் மும்பை இந்தியன்ஸுடன் அவர்களின் திறமை சாரணராக (talent scout) பதவி வகித்தார். முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டரை வரவேற்பதில் மகிழ்ச்சி கொண்டுள்ளதாக அணியின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
Twitter Post
குஜராத் டைட்டன்ஸ்-இன் ரெடென்க்ஷன் லிஸ்ட்
முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணி 18 கோடிக்கு ரஷித் கானைத் தக்கவைத்துக் கொண்டது. அதே நேரத்தில் ஷுப்மான் கில் சம்பளக் குறைப்பை ஏற்றுக்கொண்டு 16.5 கோடியில் தக்கவைத்துக் கொண்டது. சாய் சுதர்சன் 8.5 கோடிக்கும், ஷாருக் கான் மற்றும் ராகுல் தெவாத்தியா தலா 4 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டனர். நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஜெட்டாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக பார்திவ் சேர்க்கப்படுவது உரிமைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். பார்திவ், கடந்த 2020 டிசம்பரில் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அன்றிலிருந்து ஸ்கவுட்டிங் மற்றும் வர்ணனைப் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.